யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை : 13 சிறுவர்கள் மீட்பு
யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முற்றுகையிடப்பட்டு, 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த சிறுவர்கள் இல்லத்தில் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு உரியவாறு உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை