இராணுவத்தினர் பயணித்த பஸ் மோட்டார் சைக்கிளை மோதியதில் 3 வயதான சிறுமி பலி : தாய் காயம்!
இராணுவத்தினர் பயணித்த பஸ் ஒன்று மோதியதில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், சிறுமியுடன் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோதே பண்டாரகம கூட்டுறவுச் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை இராணுவத் தலைமையகத்திலிருந்து சென்ற பஸ் கெஸ்பேவ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் பிரதேசவாசிகள் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை