உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு!

நூருல் ஹூதா உமர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று உலக சுற்றுச்சூழல் தினமான திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வாண்மை பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாதால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிளாஸ்டிக் அற்ற பிராந்தியத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிராந்திய
பணி்ப்பாளர் றிபாஸ் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிளாஸ்டிக் பாவனை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் மக்களை விழிப்பூட்ட வேண்டிய முறைமை பற்றி வைத்தியர் ஏ.எஸ்.எம். பௌசாதால் விளக்கக்காட்சியுடனான விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டதுடன் பிராந்திய மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் அவர்களால் முயற்சியாண்மை தொடர்பில் உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

குறித்த சுற்றுச்சூழல் தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவு தலைவர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.