சிங்கப்பூர் தேர்தலில் களமிறங்கும் தமிழன்!

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

மேலும், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் எதிர்வரும் செபரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இவர் களமிறங்கவுள்ளமையால் அமைச்சுப் பதவியிருந்து மட்டுமன்றி, பிற பொறுப்புகளில் இருந்தும் அவர் இராஜினாமா செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.