டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!
நூருல் ஹூதா உமர், யூ.கே.காலிதீன்
டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் ஆலோசனை, வழிகாட்டலில் காலை
7.00 மணி தொடக்கம் மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசங்களில்
டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான அடையாளம் காணப்பட்ட பல இடங்களில்
டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சாய்ந்தமருது பொலிஸார், மாநகர சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை
உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் மாநகர
திண்ம கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ்
இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த வேலைத் திட்டத்துக்கு பிரதேச சுகாதார வைத்திய பணிமனை, பொலிஸ்
உள்ளிட்ட சில அரச திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்புகளை
வழங்கியிருந்தன
கருத்துக்களேதுமில்லை