தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் செந்தில் விசேட சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது மக்களின் பிரச்சினைகளை உடனுக்கு உடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத் தருவதற்காக தொழில்நுட்ப அதிகாரிகளை இணைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை