மீண்டும் சேவைக்குத் திரும்பும் குமுதினி!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது.

படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை, ரேவடி கடற்கரை பகுதியில் இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் படகின் திருத்த வேலைகள் முடிவடைந்த நிலையில் நேற்று படகினை கடலுக்குள் இறக்குவதற்கு முன்னர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு, படகு கடலினுள் இறக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை கடற்பகுதியில் இரு நாட்கள் படகு தரித்து நின்று, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் கடல் போக்குவரத்து தொடர்பிலான அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் படகின் தரம் மற்றும் திருத்த வேலைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

இதனையடுத்து பயணிகள் சேவைக்கு அனுமதி கிடைத்த பின்னரே மீண்டும் குமுதினி படகு சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டு முதல் நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடையில் குமுதினி படகானது சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.