இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்களுக்கு இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனை இல்லை

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனையை எதிர்கொள்ள மாட்டார்கள்.

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றுக்கு செல்வோர், அங்கு சென்றதும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடி காலத்தில், எந்தெந்த நாடுகளில் இருந்து வருபவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக இங்கிலாந்தில் Travel Corridor என்ற நடைமுறை அனுசரிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் பிரகாரம், இலங்கையில் இருந்து செல்வோருக்கு தனிமைப்படுத்தல் விதிவிலக்கு அளிக்கப்படுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.