இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றுக்கு செல்வோர், அங்கு சென்றதும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடி காலத்தில், எந்தெந்த நாடுகளில் இருந்து வருபவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக இங்கிலாந்தில் Travel Corridor என்ற நடைமுறை அனுசரிக்கப்படுகிறது.
இந்த நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் பிரகாரம், இலங்கையில் இருந்து செல்வோருக்கு தனிமைப்படுத்தல் விதிவிலக்கு அளிக்கப்படுள்ளது.
கருத்துக்களேதுமில்லை