முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (தீவகம்) “வலிசுமந்த எம் மக்களின் உயிர்காத்த கஞ்சி”
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் தீவகத்தின் மெலிஞ்சிமுனை, புளியங்கூடல், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி , ஊர்காவற்துறை பேருந்து தரிப்பிடம் , வேலணை வங்களாவடி சந்தி ,புங்குடுதீவு பெருங்காடு சந்தி , புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை போன்ற பகுதிகளில் மே 16 மற்றும் மே 17 ம் திகதிகளில் பொதுமக்களுக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இச்செயற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , தமிழ் அரசுக் கட்சி கனடா கிளை உபதலைவர் அகிலன் முத்துக்குமாரசுவாமி , கனடா துர்க்கையம்மன் ஆலய கிருஷ்ணராஜக்குருக்கள் ( ராசன் ஐயர் ) , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , வசந்தகுமாரன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அ. கனகையா , இரத்தினமாலா சுதர்சன் , தானியல் ரெஜினா மற்றும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , கருணாகரன் குணாளன் , கந்தசுவாமி , குயிலன் , சுதர்சன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்
கருத்துக்களேதுமில்லை