தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வேலணையில் நினைவேந்தல் ( படங்கள் இணைப்பு )
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இன்று
காலை 11 மணியளவில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது .
மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , பிலிப் பிரான்சிஸ் , அ. மேரி மற்றில்டா , சு . பிரகலாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்
கருத்துக்களேதுமில்லை