மகிந்த ராஜபக்ச அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் – சமல்

மகிந்த ராஜபக்ச அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் – சமல்
மகிந்த ராஜபக்ச அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என அவரது சகோதரர் சமல்ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒருவர் தனது பதவியை விட்டுக்கொடுக்க தயாராகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 90 வருடங்களாக அரசியலில் உள்ள ராஜபக்சாக்கள் தங்கள் சொத்துக்கள் பலவற்றை ஈடுவைத்துள்ளனர் அவற்றை அவர்கள் திரும்பபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலிலும் அலரிமாளிகையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்பு செயலாளரும் தடுக்க தவறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் திடீரென தூண்டப்பட்டார்கள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்பு செயலாளரும் அவர்களை தடுக்காமல் என்ன செய்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது என சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜேவிபியும் முன்னிலை சோசலிச கட்சியும் தாக்குதலின் பின்னணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது ஜேவிபியினர் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
May be an image of 2 people, people sitting and indoor

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.