சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர்
தாங்கள் சாகோஸ் தீவில் இறந்தால் பிரிட்டன் என்ன செய்யும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் சிலர் தாங்கள் உயிரிழந்தால் தங்கள் உடலுறுப்புகளைபிரிட்டிஸ் பிரஜைகளிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்
பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சகோஸ் தீவில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 89 இலங்கை தமிழ் அகதிகளில் 42 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவேளை பிரிட்டிஸ் இராணுவத்தினரை அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர்.
அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டியோகோ கார்சியா இராணுவதளத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது முதல் வெளி உலகத்துடனான அவர்களது தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன –முதல் ஆறு வாரங்கள் அவர்களை எவரும் தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டது என இலங்கை தமிழ் அகதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லேய் டே என்ற பிரிட்டனின் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிலிருந்து வெளியே கூடாரம்போன்றவற்றிற்குள் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தாங்கள் சர்வதேச பாதுகாப்பை கோருவதாக அவர்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது ஆனால் அவர்கள் புகலிடக்கோரிக்கையை முன்வைப்பதற்கு உதவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரிட்டனை சேர்ந்த சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஸ் நிறுவனமான லெய்டே பிரிட்டனின் வெளிவிவகார செயலாளருக்கும் பிஐஓடி ஆணையாளருக்கும் இலங்கை அகதிகள் தொடர்பில் மூன்று கடிதங்களை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது அவர்களிற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களின் கீழ் பிரிட்டனிற்கு உள்ள கடப்பாடுகளிற்கு இது முரணாணவிடயம் என பிரிட்டனின் சட்ட நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அவர்கள் தொடர்ச்சியாக வெளிஉலகுடன் தொடர்புகொள்ள அனுமதி மறுப்பது –( அவர்களின் குடும்பத்தவர்கள் – சட்ட ஆலோசகர்களுடன்) சட்டவிரோதமானது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாங்கள் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் டியாகோ கார்சியாவில் அவர்கள் அனுபவித்துவரும் விடயங்கள் மற்றும் அவர்களிற்கான தீர்வை கண்டுபிடிப்பதில் முன்னேற்றமின்மை குறித்து அதிகளவு அவநம்பிக்கை அடைந்துள்ளனர் என பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் இந்த வாரம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பாதுகாப்பை கோருவதற்கு அவர்களிற்கு எப்போது எங்னு எவ்வாறு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை-எவ்வளவு காலம் அங்கு தங்கவைக்கப்படுவார்கள் எங்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறித்தும் எந்த தகவலும வழங்கப்படவில்லைஇஎனவும் பிரிட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அகதிகளில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம் – அவர்களில் பலரின்மனோநிலையை மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்கள் என வர்ணிக்க முடியும் எனவும் பிரிட்டன் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அவர்கள் அவ்வாறான நிலையில் உள்ளனர் தாங்கள் தீவில் இறந்தால்
பிரிட்டன்
என்ன செய்யும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் சிலர் தாங்கள் உயிரிழந்தால் தங்கள் உடல்களை பிரிட்டிஸ் பிரஜைகளிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர் எனவும் பிரிட்டிஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழ் புலிகள் என அழைக்கப்படும் தமிழ் பிரிவினைவாத போராளி குழுவின் தோல்வியுடன் 2009 இல் முடிவிற்கு வந்தது.
எனினும் மனித உரிமை அமைப்புகளும் ஐநாவும் துன்புறுத்தல்கள் கண்காணிப்பு கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் – தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்துதல் என்பன கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளன.
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் 20 குழந்தைகளை உள்ளடக்கிய இந்த பலவீனமான நிலையில் உள்ள குழுவினரை மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பாடல் கல்வியின்மை சர்வதேச பாதுகாப்பை தேடுவதற்கான வழிகள் இன்மை போன்றவற்றுடன் தீவில் தடுத்துவைத்திருப்பது பிரிட்டன் செய்யக்கூடிய சரியான விடயமல்ல என லெய்டேயின் திசா கிரகெரி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட குழுவினர் அதிகளவில் நம்பிக்கையற்றவர்களாக காணப்படுகின்றனர்-நாங்கள் அவர்களின் மனோநிலை உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்இஎந்த தாமதமும் இன்றி நீடித்த தீர்வு கிடைக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் அரசாங்கம் கடந்த ஒக்டோபரில் பலரை மீன்பிடி படகிலிருந்து காப்பாற்றி பிரிட்டிஸ் இந்து சமுத்திர பகுதியொன்றிற்கு கொண்டு சென்றுள்ளது-தற்போதைய நிலைக்கு முடிவினை காணநாங்கள் அயராது பாடுபடுகின்றோம்-அவர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் எங்களின் முன்னுரிமைக்குரிய விடயங்களாக உள்ளன-24 மணிநேர மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கியுள்ளோம் என பிரிட்டிஸ் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
டியாகோ கார்சியா என்பது சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதி – 1968 இல் மொறீசியசிற்கு சுதந்திரம் வழங்கியவேளை பிரிட்டன் மொரீசியசிடமிருந்து சட்டவிரோதமாக இந்த பகுதியை பிரித்தது என ஐநா தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரிட்டன் இதனை பிரிட்டன் இந்து சமுத்திரப்பகுதி என தெரிவித்துவருவதுடன் திருப்பி கொடுக்க மறுத்துவருகின்றது.
கருத்துக்களேதுமில்லை