இலங்கையில் ராஜபக்ச வம்சத்தின் வீழ்ச்சி பற்றிய உள்வீட்டு தகவல்கள்?
இலங்கையில் ராஜபக்ச வம்சத்தின் வீழ்ச்சி பற்றிய உள்வீட்டு தகவல்கள்?
இரு வலுவான சகோதாரர்கள் மத்தியிலான உறவு எவ்வாறு முறிவடைந்தது-அவர்கள் எப்படி நாட்டையும் வீழ்ச்;சி பாதைக்கு இட்டுச்சென்றனர்
வோசிங்டன் போஸ்ட்-
பிரதமருடன் காணப்பட்ட அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர் ஆறு மணித்தியாலங்களின் பின்னரே வந்தனர் என வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தனர்.
–
மகிந்த குடும்பத்தினர் மன்றாடிய போதிலும் இராணுவத்தினர் இரவு 11 மணிவரை உதவிக்கு விரையவில்லை
–
இராணுவத்தினர் வேண்டுமென்றே உதவிக்கு வருவதை தாமதித்தனர் என்பதை மகிந்த புரிந்துகொண்டுள்ளார் என தெரிவித்தார் வீரதுங்க.அவர் கோத்தபாய தனது சகோதரர்களை மிரட்ட முயல்கின்றார் என குற்றம்சாட்டினார்.
ஆனால் அன்றைய தினம் ஜனாதிபதி இராணுவத்தினரை சீற்றத்துடன் அழைத்தபோதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை என ஜனாதிபதியுடன் இருந்த இரு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அவரால்( ஜனாதிபதியால்) இராணுவத்தினரையோ பொலிஸாரையோ கட்டுப்படுத்த முடியவில்லை என கொடஹேவ தெரிவித்தார்.
இராணுவத்தினரை ஒடுக்குமுறைகளில் ஈடுபடுமாறு தான் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழக்கூடும் என அஞ்சிய சவேந்திரசில்வா- ( அவர் தொடர்ச்சியாக மேற்குநாடுகளின் அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்தார்) தனது படையினரை பயன்படுத்துவதற்கு தயங்கினார் என கொடஹேவவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் தெரிவித்தனர்
வன்முறைகும்பல் இலங்கை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வாசல்கதவுகள் மீது தாக்குதலை மேற்கொண்டவண்ணமிருந்தது-அவர்களின் எண்ணிக்கையும் சீற்றமும் ஆபத்தான விதத்தில் அதிகரித்தவண்ணமிருந்தது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததால் கடந்த சில வாரங்களாக 76வயது பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்ற அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தார்.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரரும் அவரது வம்சத்தின் தலைவருமான மகிந்த ராஜபக்ச அப்பாச்சி என அன்புடன் அழைக்கப்பட்டார்-மக்களின் அன்புக்குரிய தந்தை.ஆனால் அவர் தற்போது தனது வீட்டின் இரண்டாம்மாடியில் குடும்பத்தவர்கள் உறவினர்களுடன் பதுங்கியிருந்தார்.உறவினர்கள் இராணுவ அதிகாரிகளை பதற்றத்துடன் அழைத்து தங்களை மீட்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
வாயில் கதவுகளிற்கு வெளியே- முன்னர் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட அரசஎதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பழிவாங்கிக்கொண்டிருந்தனர்-கலகத்தில் ஈடுபட்டனர்-பேருந்துகளை எரித்தனர்-ராஜபக்சாக்களின் சகாக்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிட்டுக்கொழுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டார் கொல்லப்பட்டார் – அவரது உடல் வீதிக்கு இழுத்துவரப்பட்டது.
அன்றைய நாள் – மே 9- இலங்கையின் சமீபத்தைய வரலாற்றில் வன்முறையும் குழப்பமும் மிகுந்த ஒன்று.ஆனால் ராஜபக்சவின் வீட்டிற்குள் பல ஆண்டுகளாக காணப்பட்ட கொந்தளிப்பே அதனை தீவிரப்படுத்தியது.
20வருடங்களிற்கு மேலாக இங்கு ராஜபக்ச சகோதரர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.2005 இல் மகிந்த ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெற உதவிய பின்னர் தேசிய வரவு செலவுதிட்டத்தின் பெரும்பங்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் அமைச்சுகளை சமல் கோட்டா பசில் தம்வசப்படுத்தினர்- ஊழல் மனித உரிமை குற்றச்சாட்டுகள் காணப்பட்ட போதிலும் மக்கள் ஆதரவை கட்டியெழுப்பினர்.
எனினும் 2019 இல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியான வேளை ராஜபக்ச குடும்பம் ,குடும்பமோதல் மற்றும் செயல்இன்மைகளால் பாதிக்கப்பட்டிருந்தது- அது தென்னாசியாவின் மிகவும் அபிவிருத்தியடைந்த நாட்டை அழித்தது.
பேட்டிகளில் தற்போதைய முன்னாள் அமைச்சர்களும்,வெளிநாட்டு இராஜதந்திரிகளும், ராஜபக்சாக்களின் சகாக்களும் -( சிலர் முதல் தடவையாக கருத்து தெரிவித்துள்ளனர்-) தாங்கள் ராஜபக்ச குடும்பம் பிளவுபடுவதை பார்த்ததாக தெரிவித்தனர்.
கோத்தபாயவும் மகிந்தவும் அவரது விசுவாசிகளும் அமைச்சரவை பதவிகள் விவசாயகொள்கைகள் முதலீடுகள் – அரசியல் சார்புகள் தொடர்பில் மோதிக்கொண்டதாக தெரிவித்தனர்.
இந்த வருடம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தவேளை தான் பதவி விலகவேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கையை மகிந்த ராஜபக்ச, குடும்பத்தின் பலரின் ஆதரவுடன் எதிர்த்தார்.
மே 9 ம் திகதி மகிந்த வீட்டிற்குள் சிக்குண்ட மகிந்தவிற்கு நெருக்கமானவர்கள் ஜனாதிபதி தங்களை கைவிட்டுவிட்டார் என கருதும் அளவிற்கு நம்பிக்கையின்மை தீவிரமடைந்தது.
பிரதமருடன் காணப்பட்ட அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர் ஆறு மணித்தியாலங்களின் பின்னரே வந்தனர் என வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தனர்.
தனது பிரதமரை அகற்றிவிட்டு புதிய பிரதமரை நியமித்த கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றார்-புதிய பிரதமர் இலங்கையிடம் ஒருபில்லியன் டொலருக்கும் குறைவான அந்நியசெலாவணியே கையிருப்பில் உள்ளதாக இந்த வாரம் தெரிவித்தார்.
இலங்கை முழுமையான அழிவை எதிர்கொள்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குடும்ப- வம்சாவளி அரசியல் குறித்து நா டு நல்ல பாடத்தை கற்றுக்கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
குடும்ப வியாபாரம்
செல்வந்த அரிசி தேங்காய் விவசாயின் மகனான மகிந்த 1970இல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவேளை இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய குறைந்த எண்ணிக்கையிலான உயர்குழாமை அவர் பின்பற்றினார்.
தன்னை நன்கு ஸ்தாபித்துக்கொண்டுள்ள குடும்பத்தை சேர்ந்தவராகயில்லாவிட்டால் உங்களால்; அரசியலில் வெற்றிபெற முடியாது என்கின்றார் சிங்கப்பூரின் தேசிய பல்கலைகழகத்தின் பேராசிரியர் ரசீன் சாலி.
ஆகவே இந்த அமைப்புமுறை அரசைகொள்ளையடிக்ககூடிய தங்களை ஸ்தாபித்துக்கொண்டுள்ள உள்நாட்டினருக்கு ஏற்றவிதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.
ஒன்பது பிள்ளைகளில் இரண்டாவதான மகிந்த கவரும் ஆளுமை கொண்டவர்- கூட்டத்தை நேசித்தார்-குடும்பத்தின் அரசியல் தந்திரோபாயவகுப்பாளர் என கருதப்படும் பசிலுடன் நெருக்கமானவராக காணப்பட்டார்.
அவர்களது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச எப்போதும் வித்தியாசமானவராக காணப்பட்டார்-ஒதுங்கிவாழ்ந்தவர்- அரசியல் அனுபவமில்லாதவர்-மதுஅருந்தாதவர் – சைவம் உண்பவர் – 21 வருடங்களில் இராணுவத்தில் இருந்தவர்.
புதுவருடத்தின் போது மாத்திரம் அவர் தனது மூதாதையர்களின் வீட்டிற்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கின்றார்-மகிந்தவிற்கு நெருக்கமான அவரது உறவினர் உதயங்க வீரதுங்க.
2005இல் ஆரம்பமான மகிந்தவின் பதவிக்காலத்தின்போது ராஜபக்ச சகோதரர்கள் குடும்பவர்த்தகம் போல நிர்வாகத்தை நடத்தினர்.அவர் கோத்தபாய ராஜபக்சவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார், பசிலும் மூத்த சகோதரர் சமலும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்-மிகப்பெருமளவு வெளிநாட்டு கடனால் தூண்டப்பட்ட பலவருடகால பொருளாதார வளர்ச்சியை இலங்கை அனுபவித்தது.
மகிந்த வாக்காளர்களின் அன்பை பெற்றார்- தமிழ் கிளர்ச்சிக்காரர்களிற்கு எதிரான 26 வருட உள்நாட்டு யுத்தத்தில் அவர் பெற்ற இரத்தக்களறி மிகுந்த ஆனால் தீர்க்கமான வெற்றியையும்-சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கான அவரது வேண்டுகோள்களையும் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
எனினும் குற்றச்சாட்டுகளும் சீனா நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடனான சந்தேகத்திற்குரிய உடன்படிக்கைகள் உட்பட ஊழல் குற்றச்சாட்டுகளும் மகிந்தவை சுற்றி காணப்பட்டன.கோத்தபாயவும் குற்றம்சாட்டப்பட்டார் ஆனால் ஒப்பீட்டளவில் குறைவாக.உக்ரைனிடமிருந்து 2006 இல் மிக் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் கேள்விகளை எதிர்கொண்டார்.
மகிந்தவும் பசிலும் சுனாமி நிதியை தங்கள் வங்கிகணக்குகளிற்கு மாற்றியது நிலங்களை கொள்வனவு செய்ய அரசநிதியை பயன்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர் என தெரிவிக்கின்றார் டிரான்ஸ்பரன்சி இன்டநசனலின் பிரதிநிறைவேற்று இயக்குநர் சங்கித குணரட்ண.எனினும் பல வழக்குகள் கைவிடப்பட்டன அல்லது முடங்கிய நிலையில் காணப்படுகின்றன.
ராஜபக்சாக்களின் ஊழல் என குற்றம்சாட்டப்படுவது பலருக்கு நிழல் அளித்த பாரிய மரம்போன்றது என்கின்றார் சங்கித குணரட்ண .
ராஜபக்ச சகோதரர்கள் வெளிநாடுகளில் மில்லியன்கணக்கில் டொலர்களை பதுக்கிவைத்திருப்பதை 2021இல் வெளியான பன்டோரா பேப்பர் என்ற நிதி ஆவணம் வெளிப்படுத்தியது.
ராஜபக்சாக்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஊழல் அதிகரித்த நிலையில் அதன் காரணமாக ஏற்பட்ட கோபம் காரணமாக 2015 இல் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.
உடனடியாக மேற்குலகசார்பு வர்த்தக பிரமுகர்கள்-இராணுவகடும்போக்காளர்கள் பௌத்தமதகுருமார் அடங்கிய ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டணி புதிய வேட்பாளரை அடையாளம் காட்டியது –கோட்டபாய ராஜபக்ச
நடுச்சகோதரர்
புதிய அரசியல் அனுசரனையாளர்களின் ஆதரவை பெற்ற கோத்தபாய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவுடன் மோதுவார் என்பது உடனடியாக புலப்பட்டது.
இருவரும் ஒருபோதும் நேரடியாக மோதியதில்லை-ஆனால் அவர்கள் அரசியல் காய்நகர்த்தல்கள் சிறிய ஊழல்கள் உட்பட ஒவ்வொரு விடயத்திலும் முரண்பட்டனர்-உடன்பட மறுத்தனர் என குடும்பத்திற்குள் உள்ள நம்பிக்கையானவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் பிரபல ஊடகங்களின் உரிமையாளர் டிலீப் ஜெயவீர 2018 இல் மகிந்த தன்னை கோத்தபாயவின் வீட்டிற்கு அழைத்தவேளை இடம்பெற்ற சம்பவத்தை நினைவுகூறுகின்றார்-( டிலிப் ஜெயவீரவே கோத்தபாயவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்தவர் என கருதப்படுகின்றார்)
சட்டவிரோதமாக கட்டப்பட்ட உல்லாசப்போக்கிடத்திற்கு மகிந்த கோத்தபாயவின் பெயரை சூட்டியிருந்தார்-அதன் மூலம் அதிகாரம் மிக்க அரசியல்சகாவான அந்த பௌத்தமதகுருவிற்கு இலவசமின்சாரம் கிடைக்க உதவுவதே மகிந்தவின் நோக்கம்.
வுழமை போலஇந்த மோசடியும் அம்பலமாகும் நிலையிலிருந்தது- மகிந்த இதை தனது சகோதரருக்கு சொல்ல தயங்கினார்,இதன் காரணமாக தனக்காக அந்த செய்தியை கசியவிடுமாறு மகிந்த ஜயவீரவை கேட்டுக்கொண்டார்.
கடும் சீற்றமடைந்த கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரருடன் காரை பகிர்ந்துகொள்ள மறுத்ததுடன் பௌத்தமதகுருவின் ஆலயத்திற்கு சீற்றத்துடன் சென்றார் என தெரிவிக்கின்றார் டிலீப் ஜெயவீர.
ஓக்டோபர் 2018 இல் ஜனாதிபதியாக பதவி வகித்த சிறிசேன பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததை தொடர்ந்து அரசியல் சதிமுயற்சி இடம்பெற்றது.
தலைநகரம் பதற்றம் மிகுந்ததாக காணப்பட்டது இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்றனர்,விக்கிரமசிங்க பலவந்தமாக வெளியேற்றப்படுவார் என்ற வதந்திகள் காணப்பட்டன.
மகிந்தவும் பசிலும் தன்னை பின்தள்ளிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயல்கின்றனர் என அஞ்சிய கோத்தபாய ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவை இரகசியமாக சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்கினார்.
மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவர் பின்வாங்கிய பின்னர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பதை தவிர குடும்பத்திற்கு வேறு வழியிருக்கவில்லை.
ஜனாதிபதியாக பதவியேற்ற தினத்தன்று- 2019 நவம்பர் 19ம் திகதி தான் தனது குடும்பத்திலிருந்து விலகி செயற்படவுள்ளதை கோத்தபாய ராஜபக்ச வெளிப்படுத்தினார்.ராஜபக்ச குடும்பத்தினரின் அடையாளமான சிவப்பு சால்வையை அணிய மறுத்தார்.
ஆயிரம் ரூபாய்நோட்டுகளில் தனது படத்தை பொறித்த மகிந்த ராஜபக்ச போன்று கோத்தபாய ராஜபக்ச செயற்படவில்லை- அரசஅலுவலகங்களில் தனது படத்தை மாட்டவேண்டாம் என அவர் உத்தரவிட்டார்.
ஆனால் மறுநாள் வீழ்ச்சியின் ஆரம்பமாக காணப்பட்டது என்கின்றார்முன்னாள் நிதி அதிகாரியும் கோத்தபாயவின் ஊடக அமைச்சருமானந நாலஹகொடஹேவ.
கோத்தபாயவிற்கு ஆதரவளித்த மேற்குலகு சார்பு வர்த்தக பிரமுகர்கள் அமைச்சரவைக்கான பல பெயர்களை தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி தனது முதல் அமைச்சரவையை வெளியிட்டவேளை அதில் மகிந்த ராஜபக்ச பிரதமராக காணப்பட்டார், பசில் மகிந்த விசுவாசிகள் பலர் காணப்பட்டனர்.அவர்கள் கடுமையான வரிவிலக்குகளை அறிவித்தனர் கடன் அதிகரித்த போதிலும் சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதற்கு எதிராக வாதிட்டனர். சர்வதேச அளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்தவேளை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் இரசாயன உரங்களை தடைசெய்தார் அது விளைச்சலை பாதித்தது.
மகிந்தவின் ஆதரவாளர்கள் தாங்களே அமைச்சரவையை வடிவமைத்ததாக தெரிவித்தனர் ஆனால் கோத்தபாயவின் நியமனங்களால் அவர்கள் குறைமதிப்பிட்டு உட்படுத்தப்பட்டனர்.
பல தடவைஅரசாங்கம் வர்த்தக கொள்கையை வெளியிட்டுவிட்டு 24 மணிநேரத்தில் அதனை வாபஸ் பெற்றது.
அமைச்சர்கள் செயலாளர்களுடன் மோதினார்கள் என வீரதுங்க தெரிவித்தார்.நிர்வாகத்தில் மோதல் ஊடுருவியது.
வீழ்ச்சி
2022 அளவில் பொருளாதாரம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைய தொடங்கியது.அரிசி போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் முன்னைய வருடத்தை விட இரண்டுமடங்கு அதிகரித்தன.சமையல் எரிவாயுவிற்கும் மின்சாரத்திற்கும் பற்றாக்குறை காணப்பட்டது.அந்நிய செலவாணிமுற்றாக தீர்ந்துபோகும் நிலையில் காணப்பட்டது.
ஏப்பிரலில் ராஜபக்சாக்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என கோரும் இரவு ஆர்ப்பாட்டங்கள் தலைநகரில் வெடித்தன- சில ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மிகுந்தவையாக காணப்பட்டன.நிதியமைச்சர் பசில் மூத்த சகோதரர் சமல் மகிந்தவின் மகன் ஆகியோரை உள்ளடக்கிய முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. இதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினர்.
வெளிநாட்டு நிதி கொடுப்பனவாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடனடி உதவிகளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஸ்திரமான நிலை காணப்படுகின்றது என்ற தோற்றப்பட்டை உருவாக்கவேண்டிய தேவை இலங்கைக்கு காணப்பட்டது.
எனினும் பதவி விலகவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் வேண்டுகோள்களையும் ஜனாதிபதியின் சமிக்ஞைகளையும் மகிந்த ராஜபக்ச ஏற்க மறுத்தார்.
கோத்தபாய ராஜபக்ச அழுத்தங்களை கொடுக்கவில்லை- எனக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும் என ஜிஆர் தெரிவிப்பார் பல ராஜபக்சக்கள் வெளியேறிய பின்னர் அமைச்சரவையில் இணைந்துகொண்ட கொடஹேவ. பசில் மகிந்தவின் ஆதரவு தேவை என அவர் கருதினார் என அவர் தெரிவித்தார்.
மகிந்த மீதான அழுத்தங்கள் அதிகரித்து வந்த நிலையில் மே 9ம்திகதி அவரது ஆதரவாளர்கள் அலரிமாளிகையில் பேரணியொன்றை ஏற்பாடு செய்தனர்.
உணர்ச்சிவசப்பட்ட- பதவியை இராஜினாமா செய்வது குறித்து சிந்தித்த குலத்தலைவர் திடீர் என உற்சாகமடைந்தார் என தெரிவிக்கின்றனர் உள்ளே நடந்த விடயங்களை பார்த்த இருவர் . வீடியோக்களும் அதனை காண்பிக்கின்றன.
மக்களை எப்போதும் செவிமடுத்துள்ள தலைவன் என்ற அடிப்படையில் நான் தற்போது உங்களை பார்த்து கேட்கின்றேன் என்ன செய்யவேண்டும் என சரவிளக்குகள் ஏற்றப்பட்ட மண்டபத்தில் காலின்மேல் கால் போட்டு அமர்ந்தபடி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை பார்த்து மகிந்த கேட்டார்.
நீங்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிக்கவேண்டும் என அவர்கள் கூச்சலிட்டனர்-
நான் பதவி விலகவேண்டும் என்பதா அதன் அர்த்தம் என மகிந்த மீண்டும் கேட்டார்.எதிர்த்து போராடுமாறு வெளிப்பட்ட வேண்டுகோள்களில் அவர் திளைத்தார்.
பேரணி முடிவடைந்ததும் ஆதரவாளர்கள் கைகளில் தடிகளுடன் அலரிமாளிகையிலிருந்து சீற்றத்துடன் வெளியேறினர்-அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்,நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரத்தக்களறியை தூண்டினர்.
அலரிமாளிகைக்குள் தனது இருமகன்களுடன் சிக்குண்ட மகிந்த – அவர்கள் அவரை அங்கிருக்குமாறு கேட்டுக்கொண்டனர்-தனக்கு உரை எழுதுபவரை அழைத்து மகிந்த ( பகல் நான்கு மணி) தான் பதவி விலகுவதாக தெரிவித்தார்.
உரைஎழுதுபவர் இதனை உடனடியாக ஊடகங்களிற்கு தெரிவித்தார்.ஆனால் அதன் காரணமாக வன்முறைகள் குறையவில்லை என உள்ளேயிருந்த இருவர் தெரிவித்தனர்.
மகிந்த குடும்பத்தினர் மன்றாடிய போதிலும் இராணுவத்தினர் இரவு 11 மணிவரை உதவிக்கு விரையவில்லை.
அதிகாலை நான்கு மணிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வாயில் கதவை நெருங்கியவேளையே இராணுவத்தினர் மகிந்தவை வெளியேற்றி இராணுவதளத்திற்கு கொண்டுசென்றனர்.
இராணுவத்தினர் வேண்டுமென்றே உதவிக்கு வருவதை தாமதித்தனர் என்பதை மகிந்த புரிந்துகொண்டுள்ளார் என தெரிவித்தார் வீரதுங்க.அவர் கோத்தபாய தனது சகோதரர்களை மிரட்ட முயல்கின்றார் என குற்றம்சாட்டினார்.
ஆனால் அன்றைய தினம் ஜனாதிபதி இராணுவத்தினரை சீற்றத்துடன் அழைத்தபோதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை என ஜனாதிபதியுடன் இருந்த இரு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அவரால்( ஜனாதிபதியால்) இராணுவத்தினரையோ பொலிஸாரையோ கட்டுப்படுத்த முடியவில்லை என கொடஹேவ தெரிவித்தார்.
இராணுவத்தினரை ஒடுக்குமுறைகளில் ஈடுபடுமாறு தான் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழக்கூடும் என அஞ்சிய சவேந்திரசில்வா- ( அவர் தொடர்ச்சியாக மேற்குநாடுகளின் அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்தார்) தனது படையினரை பயன்படுத்துவதற்கு தயங்கினார் என கொடஹேவவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் தெரிவித்தனர்.
அன்றைய தினம் இராணுவம் இல்லாதது-சகோதரர்களிடையே பிளவுகளை ஆழமாக்கியது.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சமல் 2015 இல் அரசியலில் இருந்து விலகாததற்காக மகிந்தவை கடுமையாக சாடினார்.ராஜபக்ச கட்சியின் சமீபத்தைய கூட்டத்தில் குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் தங்களை ஏன் மே9 ம் திகதி பாதுகாக்கவில்லை என சீற்றத்துடன் கேள்வி எழுப்பினர்?இது முரண்பாட்டின் வழமைக்குமாறான காட்சியாக காணப்பட்டது.
கோத்தபாய கட்சியை எப்படி நடத்துகின்றார் என்பது மக்களின் சீற்றத்தின் பாதையை தீர்மானிக்கும் என்கின்றார் வீரதுங்க.
மே 12ம் திகதி குழப்பமடைந்த –மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கோத்தபாய ஒரு புதிய பிரதமரை நியமித்தார்: ரணில் விக்கிரமசிங்க- 2018 இல் தனது சகோதரருக்கு எதிராக போட்டியிடுவதற்கு தீர்மானித்தவேளை ரணில்விக்கிரமசிங்கவையே கோத்தபாய முதலில் சந்தித்திருந்தார்.
நான்கு வருடங்களின் பின்னர்; இலங்கையின் மிகவும் வலுவான குடும்பம் வீழ்ச்சியடைகின்றது – நொருங்குகின்றது- நல்லதற்காகவும் இருக்கலாம் என்கின்றார் ஜயவீர – இலங்கையின் பல ஊடகநிறுவனங்களின் தலைவர்.
ராஜபக்சாக்களும் இலங்கையும் துன்பியல் முடிவை சந்தித்தனர்-என்று அவர் தெரிவித்தார்- அதற்கு அவர்களின் சொந்த நடவடிக்கையே காரணம் என்றார்.
கருத்துக்களேதுமில்லை