அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 19 பேர் பலி
அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 19 பேர் பலி
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஐந்து முதல் 11 வயது மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் துப்பாக்கிப் பிரயோகம் வழமைக்கு மாறான விடயம் என்பதால் இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் ஆரம்பித்ததும் அருகிலிருந்த அமெரிக்க எல்லை காவல்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து அந்த நபரை சுட்டுக்கொன்றனர் என ஏபி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நபர் பாடசாலை மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு முன் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் கைத்துப்பாக்கி மற்றும் ஏஆர்15 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் தனியாக இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அருகில் உள்ள மருத்துவமனைகளில் பல சிறுவர்கள் துப்பாக்கிக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://scontent.fcmb2-2.fna.fbcdn.net/v/t39.30808-6/283396308_2146398078875694_1211108800607924184_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=MsNefe11tHgAX8LRTmh&_nc_ht=scontent.fcmb2-2.fna&oh=00_AT-KGbbaJ8JcLDIzG59cMiC9lGf5QrkNzn6nTKMdUO-xYQ&oe=6291B128)
![](https://scontent.fcmb2-2.fna.fbcdn.net/v/t39.30808-6/283276994_2146398092209026_1968120440628403620_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=xeQg1woy-sgAX_nS6FL&_nc_ht=scontent.fcmb2-2.fna&oh=00_AT9xjOf7JCGjYOQambylFXw7S0a1cBYXTOevKhyXAN0BmA&oe=62933C03)
![](https://scontent.fcmb2-2.fna.fbcdn.net/v/t39.30808-6/283200101_2146398188875683_6124920556666569526_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=75iHHteKaYQAX_-BHNQ&_nc_ht=scontent.fcmb2-2.fna&oh=00_AT9Vu5Q9gkAGx_4A12nFwWpnBCXp1ao33E453eJvJKrtCQ&oe=62935690)
கருத்துக்களேதுமில்லை