மீன் விலை மேலும் உயர்வு!!!!!!!!!!
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் கிடைக்காததால், நேற்று (24ம் திகதி) போதுமான மீன்கள் சந்தைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் மொத்த விலை நூறு முதல் இருநூறு ரூபாய் வரை மீண்டும் அதிகரித்துள்ளது.
இது அதிகளவு மீன் கிடைக்கும் பருவமாக இருந்தாலும் மீனவர்களுக்கு எரிபொருளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதால் மீன்கள் மிகக்குறைவாகவே பிடிக்க்கப்படுவதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே நாளில் மீன் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை உடனடியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருளை வழங்கினால் மீன்களின் விலை உயராமல் கட்டுப்படுத்த முடியும் எனவும் பொறுப்பான தரப்பினர் அதனை முறையாக கையாளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை