மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா?

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் காரை அவரே வடிவமைத்துள்ளார் என்ற ருசிகர தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நீண்டகால இறுதிச் சடங்குகளுக்கு பிறகு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

ராணி இரண்டாம் எலிசபெத் 96 வயதில் ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் உள்ள அவரது தோட்டத்தில் இறந்தார்.

அவரது உடலை லண்டனுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதால் அவரது இறுதி ஊர்வலம் நீண்ட தூரமாக இருந்தது. இதன் விளைவாக அவரது உடல் முதலில் ஒரு funeral home-ல் இருந்து வந்த Mercedes-Benz அமரர் ஊர்த்தியில் எடுத்துச் செல்லப்பட்டது.

ஆனால், அதற்கு பிறகு செப்டெம்பர் 13 முதல் அவரது ஊர்வலத்திற்கு முழுக்க முழுக்க, அரச குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் ராணியால் ஓரளவு வடிவமைக்கப்பட்ட ஒரு custom-designed ஜாகுவார் வாகனம் பயன்படுத்தப்பட்டது.

ராணி இறப்பதற்கு முன் இந்த வாகனத்தின் வடிவமைப்பு திட்டங்கள் குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டு இறுதி மாதிரிக்கு அவரே ஒப்புதல் அளித்தார்.

இது 2010 Jaguar XJ saloon அடிப்படையாகக் கொண்டதாகக் கருதப்படுகிறது. மேலும் இது ரோயல் ஹவுஸ்ஹோல்ட் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பிரத்தியேக ஜாகுவார் கார் Royal Claret நிறத்தில் வர்ணம் பூசப்பட்டது.

கோடிக்கணக்கில் பெறுமதி மிக்க இந்த வாகனத்தை இங்கிலாந்தில் உள்ள Wilcox Limousines கார் நிறுவனம் தயாரித்துள்ளது.

துக்கம் அனுசரிப்பவர்கள், அஞ்சலி செலுத்துபவர்கள் சவப்பெட்டியை தெளிவாக பார்க்கும்படி உயரமாகவும், பாரிய ஹூட், பெரிய கண்ணாடியுடன் வடிவமைக்கப்பட்டது.

மேலும் சவப்பெட்டி நன்றாக தெரியும்படி ஸ்பாட் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாகனத்தின் இரு பக்கங்களிலும் ராணியின் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், டிராகனைக் கொன்ற செயின்ட் ஜார்ஜின் வெள்ளி முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையுடன் கூடிய அதிக அளவில் நீட்டப்பட்ட ஜாகுவார் செடானாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராணிக்கு ஜாகுவார், டைம்லர்ஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் மிகவும் பிடித்த கற்களாக இருந்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.