வனிந்து ஹசரங்க பற்றி முரளி
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் வனிந்து ஹசரங்கவினால் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஒன்றைச் செய்ய முடியும் என நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கூறுகிறார்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ள முத்தையா முரளிதரன் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் உலகக் கிண்ண நம்பிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் லெக் ஸ்பின்னர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.
எனவே, உலகில் உள்ள ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்கள் வனிந்து ஹசரங்க மீது அதிக கவனம் செலுத்துவார்கள் என்றார்.
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் போது வனிந்துவின் ஆட்டத்தை அவுஸ்திரேலிய தொடரிலும் இதே போன்று நடைமுறைப்படுத்தினால் அது ஏனைய அணிகளுக்கும் கடும் சவாலாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை