அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் கரையொதுங்கிய 230 திமிங்கலங்கள்! அதிர்ச்சியில் மக்கள்

அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று (21) முதலாக பல திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைலட் திமிங்கலங்கள் எனப்படும் இந்த வகை திமிங்கலங்கள் 230 கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதில் 35 திமிங்கலங்கள் கடல் அலைகளின் எல்லையை தாண்டி கடற்கரையில் உள்ள நிலையில், பலர் அவற்றின் மீது நீரை ஊற்றி குளிர்வித்தும், துணிகளை வைத்து மூடியும் பாதுகாத்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் கரையொதுங்கிய 230 திமிங்கலங்கள்! அதிர்ச்சியில் மக்கள் | Beached Whale Whales Stranded On Australian Beach

 

 

பாதுகாப்பு நடவடிக்கைகள்

அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் கரையொதுங்கிய 230 திமிங்கலங்கள்! அதிர்ச்சியில் மக்கள் | Beached Whale Whales Stranded On Australian Beach

அவற்றை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மெக்குவாரி துறைமுகம் அருகே இதுபோல 500 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதும், அவற்றில் 300 திமிங்கலங்கள் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.