உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு
உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை என உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பு மூலம் குறித்த பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் சுயாட்சி கொண்டதாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனின் டொனெஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளிலும் கெர்சன் மற்றும் ஷப்போறிஸ்ஷியா பிராந்தியங்களிலும் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
புடினின் படையெடுப்பு
குறித்த பிராந்தியங்களை பாதுகாப்பதற்கு அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கு தமது நாடு தயாராக உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வடேவ் கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் படையெடுப்பை இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி நியாயப்படுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை