இத்தாலிய வரலாற்றை புரட்டிப்போடுவாரா ‘ஜோர்ஜியா மெலோனி’..! சூடுபிடிக்கும் தேர்தல் களம்
இத்தாலிய பொது தேர்தல் – 2022
இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் தீவிர வலதுசார அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தாலி நேரப்படி இன்று காலை 07 மணிக்கு ஆரம்பித்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு இரவு 11 மணிக்கு நிறைவுக்கு வரவுள்ளது.
முதல் பெண் பிரதமராவாரா ஜோர்ஜியா மெலோனி
இந்தத் தேர்தலில் தீவிர வலதுசாரியான இத்தாலியின் சகோதரர்கள் கட்சியை ஜோர்ஜியா மெலோனி தலைமை தாங்குவதுடன், ஏனைய இரண்டு வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றார்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இத்தாலியின் முதலாவது பெண் பிரதமராக அவர் தெரிவுசெய்யப்படுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் தடைகளுக்கு அவர் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
எனினும் கடவுள், தேசபக்திமிக்க நாடு மற்றும் குடும்பம் என்ற பழமையான பாசிச முழக்கத்தை அவர் தற்போதும் வெளிப்படுத்தி வருகின்றார்.
அத்துடன் எல்.ஜி.பி.ரி ( மாற்றுப்பாலின) சமூகத்தினருக்கு எதிரான கோஷத்தை முன்வைத்துள்ள அவர், லிபியாவில் இருந்து வரும் குடியேறிகளை கட்டுப்படுத்த கடற்படைக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை