பசியின் கொடுமை – இரண்டு பிள்ளைகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த தாய்

நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே காவல் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தாய் இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

பசியின் கொடுமை - இரண்டு பிள்ளைகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த தாய் | Hunger Mother Surrenders Two Children At Police

 

 

வாழைப்பழமே சாப்பாடு

கடற்றொழில் செய்து வரும் தனது கணவர் தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை எனவும் பிள்ளைகளுடன் அடிக்கடி பட்டினி கிடப்பதாகவும் தாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நூறு ரூபாய்க்கு வாங்கிய வாழைப்பழங்கள் தான் கடைசியாக சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு மதிய உணவும், உலர் உணவும் வழங்க காவல்தறை பொறுப்பதிகாரி ஏற்பாடு செய்துள்ளார்.

பசியின் கொடுமை - இரண்டு பிள்ளைகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த தாய் | Hunger Mother Surrenders Two Children At Police

 

பெண்ணின் கணவர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களை நன்றாக நடத்துங்கள் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.