ரஷ்ய துருப்புகளுக்கு மரண அடி..! முக்கிய கோட்டைகள் உக்ரைனிடம் விழும் சூழல்
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா நேற்று இணைத்துள்ள நிலையில், இன்று உக்ரைனிய இராணுவம் ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த லைமன் நகரை சுற்றிவளைத்துள்ளதால் 5 ஆயிரம் ரஷ்ய படையினர் அதற்குள் சிக்கியுள்ளனர்.
இதனால் களமுனையில் புதிய பரபரப்பு நிலவிவருவாக அறியமுடிகிறது.
இந்த நடவடிக்கையில் பல ரஷ்ய படையினர், கொல்லப்பட்டதாகவும் நகரத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மீண்டும் தமது படையிரால் கைப்பற்றப்பட்டுள்ளதானவும் உக்ரைனிய இராணுவம் அறிவித்துள்ளது.
24 மணிநேர தாக்குதல்
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சன் மற்றும் ஷபோரிஜியா ஆகிய பிராந்தியங்கள் நேற்று ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு 24 மணிநேரத்தில் உக்ரைன் இந்த வெற்றியை பெற்றுள்ளது.
லைமன் நகர் தற்போது உக்ரைனிய படையினரால் சூழப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ரஷ்ய தரப்பு இழப்புகள் குறித்து அறிவிக்கவில்லை.
தற்போது ரஷ்ய துருப்புக்களின் தொடர்ச்சியான அனைத்து திருப்புமுனை முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டதால், லைமன் கைப்பற்றப்பட்டதால் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள மேலும் முக்கிய கோட்டைகள் உக்ரைனிடம் விழும் சூழல் எழுந்துள்ளது.
இந்த வெற்றி உளவியல் ரீதியாக உக்ரைனுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
வெட்டுரிமை வாக்களிப்பு
இதற்கிடையே உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யா நேற்று தன்னுடன் இணைத்ததைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் நேற்று ஒரு தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்ற முனைந்தாலும் அதனை ரஷ்யா தனது வீட்டோ எனப்படும் வெட்டுரிமை வாக்கை பயன்படுத்தி தடுத்துள்ளது.
இந்த வாக்களிப்பில் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை