ஆபத்தில் சிக்கிய படகிலிருந்து 38 பேர் மீட்பு!

கற்பிட்டியில் ஆபத்தில் சிக்கிய படகிலிருந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் 38 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (1) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்காக பதிவுசெய்யப்பட்ட குறித்த இழுவைப்படகு, கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டு தீவுக்கு பயணித்தபோது, அடிப்பகுதியில் படகினுள் கடல் நீர் கசிந்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இழுவை படகு குறித்து அதன் உரிமையாளர் கல்பிட்டி கடற்படை படகு தளத்திற்கு உடனடியாக பிற்பகல் அறிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட கடற்படையினர், வடமேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் இரு படகுகளையும், இலங்கை கடலோர காவல்படையின் கண்காணிப்பு படகு ஒன்றையும் சம்பவ இடத்துக்கு அனுப்பினர்.அதன் பிரகாரம் அப்படகுகளின் ஊடாக, விபத்தில் சிக்கிய இழுவைப் படகில் இருந்த, 6 பெண்கள் மற்றும் 32 ஆண்கள் உட்பட 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கற்பிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.