முட்புதரில் வீசப்பட்ட 04 வயது குழந்தை: 22 வயது இளைஞன் கைது!.

வீடொன்றிலிருந்து குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (07) ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட04 வயதே ஆன குழந்தையை ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இளைஞன் ஒருவர் கைது

முட்புதரில் வீசப்பட்ட 04 வயது குழந்தை: 22 வயது இளைஞன் கைது! | A 04 Year Old Child Was Thrown Into A Thornbush

குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை சுற்றப்பட்டிருந்த உரப்பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெற்றோருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி விசாரணை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.