நவம்பர் 15 முதல் புதிய நடைமுறை..! கனடாவுக்கு புலம்பெயரவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கனடாவில் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
ஆகவே, பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிப்பதற்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கனடா தொடர்ந்து பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுவரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக, அடுத்த மாதம், அதாவது நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல், கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்யலாம் என கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை
இதுவரை, முழு நேரக் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது.
இனி, அதாவது, நவம்பர் 15 முதல், அந்த கட்டுப்பாடு கிடையாது. மாணவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
பணியாளர் பற்றாக்குறையால் தடுமாறி வரும் துறைகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser.
இந்த தற்காலிக நடைமுறைகள், 2023ஆம் ஆண்டு இறுதிவரை அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை