இந்நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இல்லை – சஜித் பிரேமதாச எம்.பி
இந்நாட்டில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை எனவும், சக தேசிய இனத்தவர்களே உள்ளனர் என்பதே தனதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடு என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் எவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் 12 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யார் எவ்வாறு அர்த்தம் கற்பித்தாலும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்றுள்ளது போல் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும்,அது குறையவோ,அதிகரிக்கப்படவே கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை