உரப் பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் இன்று
பெரும்போகத்துக்கான யூரியா உரங்களை இறக்குமதி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான விபரங்கள் இன்று (10) அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக கோரப்பட்ட முதலாவது கேள்விப்பத்திரம் தோல்வியடைந்ததையடுத்து இரண்டாவது டெண்டரில் 3 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது இறுதி அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை