உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% குறைக்க தீர்மானம்
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆக குறைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“அடுத்த தேர்தலுக்கு முன்னர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைத்து, ஜன சபைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .
“பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரம் ஒரு தலைவருக்கு பதிலாக தலைவர் அடிப்படையிலான குழுவிற்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் அடுத்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் இந்த திருத்தங்களை உள்ளடக்கிய சட்ட வரைவு தயாரிக்கப்படும்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஊழலுக்கு முக்கிய காரணம் விருப்புரிமை முறையே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, விருப்புரிமையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு தேர்தல் முறைமையை உடனடியாகக் கடைப்பிடித்து, தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்திற்கு தேர்தல் சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை