தோனி கூறிய ஒரே ஒரு வரி.. உற்சாக கடலில் மிதக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. 2023ல் இதுதான் சம்பவமாம்!

சென்னை: இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கூறிய ஒரே ஒரு வரியை கேட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இவர் கடந்தாண்டே ஓய்வு பெற்றுவிடுவார் என ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் அடுத்த வருடமும் தோனி தான் கேப்டன் எனக்கூறி சர்ஃபரைஸ் கொடுத்தனர்.
ஐபிஎல் 2023 இதற்கேற்றார் போலவே பிசிசிஐ-ம் அட்டகாச அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பழைய முறைப்படி ஹோம் கிரவுண்டிலும் நடைபெறும் என அறிவித்தது. அதாவது ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகள் சொந்த ஊர் மைதானத்திலும், 7 போட்டிகளை மற்ற ஊர் மைதானங்களிலும் விளையாடும். இதுதான் தோனிக்கு சூப்பர் வாய்ப்பாக அமைந்துள்ளது.
தோனியின் விருப்பம் தனது ஓய்வு குறித்து பேசியிருந்த தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே ரசிகர்கள் முன்பு விளையாடிவிட்டு தான் ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்தார். அந்தவகையில் பார்த்தால் 41 வயதாகும் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாடிவிட்டு ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

தோனி கூறிய வார்த்தை இந்நிலையில் தனது ஒரே ஒரு வரியால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். சென்னையில் சிஎஸ்கே அணியின் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்.எஸ்.தோனி, சேப்பாக்கம் மைதானத்திற்கு நாங்கள் மீண்டும் அடுத்த வருடம் வருகிறோம். அவர்கள் முன்னிலையில் கம்பேக் கொடுக்கிறோம் என்பது போன்று பேசியுள்ளார்.
கம்பேக் தோனியின் இந்த வார்த்தையை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு ஐபிஎல்-ல் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. எனவே 2021 சீசனை போலவே தரமான கம்பேக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.