“இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!”- இயக்குநர் ராஜமௌலி
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “ராஜ ராஜ சோழன் இந்து அரசனாக ஆக்கப்படுவது கலை இலக்கியம் மட்டுமின்றி சினிமாவிலும் நடைபெற்று வருகிறது” என்று பேசியது விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கேட்டபோது அவரது கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமௌலி இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்துப் பேசியிருக்கிறார். அந்நிகழ்வில் பேசிய அவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் உள்ள இந்து மதத்தின் சித்திரிப்பு குறித்துத் தெரிவித்திருக்கிறார்.
கருத்துக்களேதுமில்லை