கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்..! யாழில் கைது செய்யப்பட்ட இருவர்..
யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் குறித்த இருவரும் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோப்பாய் பகுதியில்
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பகுதியில் வைத்து இருவரும் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் , ஒன்றரை கிராம் ஹெரோயின் , 10 ஊசி சிரிஞ் , தேசிக்காய் , லைட்டர் , தீப்பெட்டி உள்ளிட்ட போதை ஏற்ற பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை