நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘சர்தார்’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். யுகபாரதி பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஏறு மயிலேறி என தொடங்கும் இந்த பாடல் கிராமிய குத்து இசை பாடலாக அமைந்துள்ளது என இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஏறுமயிலேறி இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஏறுமேயிலேறி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 4 நிமிடங்கள் 17 வினாடிகள் ஓடுகிறது இந்தப் பாடல். கிராமங்களில் நடைபெறும் நாடக பின்னணியில் இப்பாடல் துவங்குகிறது.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி
கருத்துக்களேதுமில்லை