வெனிசூலாவில் மண்சரிவு; 36 பேர் உயிரிழப்பு

வெனிசூலா நாட்டின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர்.

சுமார் 1,000 பேர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவிப்பதாகவும் வெனிசூலா துணை ஜனாதிபதி டெல்ஸி ரொட்ரிகுவாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ 03 நாட்கள் தேசிய துக்கதினத்தை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.