3 வருட கால இடைவெளியின் பின்னர் பலாலி – சென்னை விமான சேவை அடுத்த வாரம் முதல்

குறைந்த கட்டணத்தில் இடம்பெற ஏற்பாடு

மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த வார தொடக்கத்தில் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்கள் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமான சேவைகள் மற்றும் மலிவான விமானக் கட்டணங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வடக்கு மக்களுக்கு பெரிதும் உதவும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.