இரு சடலங்கள் மீட்பு!!

கொழும்பின் கொள்ளுபிட்டி மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து இரு சடலங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், களனி கங்கையில் மிதந்த  ஆண் ஒருவரின் சடலம் இன்று  ( 11) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தில் இரு கைகளும் இருக்கவில்லை என பொலிஸார் கூறினர்.  சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கடற் பரப்பில் மிதந்துகொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலத்தையும் இன்று பகல் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சடலமும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.