டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!!!
இன்றைய (11) வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 369.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 359.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 394.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை