வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு மற்றும் இலாப கொடுப்பனவும் வழங்கப்படும் : கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்!!!!!
வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தியை அதிகரிக்க ஊழியர்களின் பங்களிப்பு முக்கியம் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதுடன் இலாப கொடுப்பனவும் வழங்கப்படும் என்று கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க தெரிவித்தார்.
ஆலையில் கடதாசி உற்பத்தி தொடர்பாகவும்இ ஆலையின் குறைபாடுகள் தொடர்பாகவும் நிருவாகிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன்இ ஆலை உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் பார்வையிட்ட பின்னர் ஊழியர்களின் தேவைகளையும் கேட்டரிந்து கொண்டார்.
அதன் பின்னர் கருத்து தெரிவிக்கையில். கடதாசி ஆலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சனைகள் ,போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பில் கூறப்பட்ட நிலையில் போக்குவரத்து பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆலையில் பழுதடைந்த நிலையில் உள்ள அம்புலன்ஸ் வண்டியை திருத்தி ஊழியர்களின் போக்குவரத்து பிரச்சனைக்கு பயன்படுத்த வழங்குவதாகவும் உறுதி வழங்கினார்.
அத்தோடு உற்பத்தியை அதிகரிக்கும் பட்சத்தில் இருபத்தைந்து நாட்களுக்கு மேல் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவும்இ நாளாந்தம் வழங்கி வரும் ஆயிரம் ரூபா சம்பளத்தில் இருந்து மேலதிமாக 350 ரூபா சேர்த்து நாளாந்த சம்பளமாக 1350.00 ரூபா வழங்கவுள்ளதாகவும் வாக்குறுதி வழங்கினார். இதற்கு ஊழியர்கள் இராஜாங்க அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடதாசி ஆலையின் தவிசாளர் விமல் ரூபசிங்கஇ கடதாசி ஆலையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி ஓய்வுபெற்ற கேணல் எஸ்.பி.சுதர்மசிறிஇ உற்பத்தி முகாமையாளர் வி.சிவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை