“14 வயசுலயே”.. சொந்த கார் வாங்கிய பூவையார்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ்.|
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அசத்தலாக பாடுவதுடன் மட்டுமில்லாமல், முழுக்க முழுக்க ஜாலியாக பூவையார் செய்யும் விஷயங்களும் மக்கள் பலரையும் வெகுவாக ஈர்த்திருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, திரைப்படங்களில் பாடுவது ஒரு பக்கம் இருந்தாலும், குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்திருந்தார் பூவையார்
அதிலும் குறிப்பாக, விஜய் நடிப்பில் உருவாகி இருந்த ‘பிகில்’ படத்தில் பாட்டு பாடி நடனமாடவும் செய்திருந்தார். அதே போல, ‘மாஸ்டர்’ திரைப்பிடத்திலும் விஜய்யுடன் இணைந்து சிறுவன் பூவையார் நடித்திருந்த காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. இதனால் சிறு வயதிலேயே தனது கலை பயணத்தில் அடுத்த லெவலுக்கும் சென்றிருந்தார் பூவையார்.
இந்நிலையில், தனது 14 வயதிலேயே பூவையார் கார் வாங்கியது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சிறு வயதிலேயே தனது கடின உழைப்பால் மிக உயரமான இடத்திற்கு சென்றுள்ள பூவையார், பலருக்கும் ஒரு வகையில் இன்ஸபிரேஷனாகவும் இருந்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து இன்று சாதித்துள்ள சிறுவன் பூவையாரை பலரும் தங்கள் வீட்டு பிள்ளையை போல தான் பார்க்கின்றனர்.
இதனிடையே, தற்போது கார் வாங்கி உள்ளார் பூவையார். தன்னுடைய 14 ஆவது வயதில் கார் வாங்கியுள்ள பூவையார், இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும் தனது கேப்ஷனில், “மக்களே எங்களோட புதிய கார். நீங்கள் இல்லயே நான் இல்லை. உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும். அனைவருக்கும் நன்றி. இறைவனுக்கும் நன்றி. எல்லா புகழும் ஆண்டவனுக்கு” என குறிப்பிட்டுள்ளார்.
சிறு வயதிலேயே இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ள பூவையாரை பலரும் வாழ்த்தி வருகின்ற்னர்.
கருத்துக்களேதுமில்லை