ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 150 இலட்சம் ரூபாவை பரீட்சை திணைக்களம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை எதிர்வரும் பரீட்சை கடமைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகிக் கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு | Does Not Provide Allowance To Teachers

 

 

பாரிய பொருளாதார நெருக்கடி

ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு | Does Not Provide Allowance To Teachers

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் வழிகாட்டல் கோவையின் நிபந்தனைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.