நஷ்ட ஈட்டை கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முயற்சிக்கும் அரசாங்கம்..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக அதிகரிப்பது என்பது உறவுகளை ஏமாற்றும் செயல் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

சர்வதேச பொறிமுறை தேவை

நஷ்ட ஈட்டை கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முயற்சிக்கும் அரசாங்கம்..! (காணொளி) | Sri Lanka Missing Persons In Sri Lanka Government

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” முன்னர் ஒரு இலட்ச ரூபாயினை நஷ்ட ஈடாக வழங்கினார்கள். தற்போதைய நாட்டின் பணவீக்கம் காரணமாக ஒரு இலட்ச ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாய் பெறுமதிக்கே சமனானது.

அந்த நிலையில் தற்போது 2 இலட்ச ரூபாய் என்பது 50 ஆயிரம் ரூபாய் பெறுமதிக்கே சமனாது. ஆகவே தொகையை அதிகரித்து வழங்குவது போல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மீண்டும் ஏமாற்ற முனைகிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட ரீதியாக திட்டவட்டமாக கூற முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச பொறிமுறை தேவை என உறவுகள் போராடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.