ரணில் கொடுத்த பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிகா..!

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பதில் கடிதம்

ரணில் கொடுத்த பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிகா..! | Chandrika Kumaratunga President Ranil Sl Crisis

எப்படியிருப்பினும், இந்தக் கடிதம் கிடைத்த சில மணித்தியாலங்களில் அந்த பதவியை நிராகரித்து அதிபருக்கு பதில் கடிதம் அனுப்ப முன்னாள் அதிபர் சந்திரிகா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், அவர் அலுவலக வசதிகளையோ அல்லது தனக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மறுத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.