“நீங்க செய்றதலாம் திங்க முடியாது”! – கிச்சனில் வெடித்த மகேஸ்வரி VS தனலட்சுமி சண்டை.!

 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

 

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில்தான் போட்டியாளர்கள் பல்வேறு குழுவினராக பிரிந்து செயல்படுகின்றனர். இதில் கிச்சனில் விஜே மகேஸ்வரி சமைக்கிறார். அப்போது அவரிடம் சாம்பார் ஏன் இப்போது வைக்கிறீர்கள் என தனலட்சுமி கேட்க, மகேஸ்வரியோ, “இது என்ன கேள்வி, பிக்பாஸ் வீடு பொதுவானது. அனைவருக்கும் பார்த்து பார்த்து செய்ய முடியாது. இந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் வசதியை பொருத்துதான் அதை செய்ய முடியும், நீங்களும் அதைத்தான் சாப்பிடணும்.. கஷ்டப்பட்டு சமைச்சுட்டு இருக்கோம்.. சாம்பார் ஏன் இப்ப வைக்குறீங்கனு லூசு மாதிரி கேள்வி கேக்குறாங்க” என்று சொல்ல, பதிலுக்கு தனலட்சுமியோ “நீங்க லூசு மாதிரி பேசாதீங்க.. நீங்க எப்போ வேணா செய்றதலாம் திங்க முடியாது. அதை சொல்ல வேண்டியது என்னோட இஷ்டம்” என்கிறார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.