மொட்டு கட்சியில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்
ராஜபக்சாக்களின் முகங்கள்
மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றுவதை நிறுத்தியிருப்பதை காணமுடிந்தது.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்களுக்கு பதில் கட்சியின் இலட்சினையை மாத்திரமே காண முடிந்தது.
எனினும் முதல் நாள் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்பக்க திரையில் மஹிந்த-கோட்டாபய-பசில் ஆகியோரின் முகங்களைப் பார்க்க முடிந்தது.
ஆட்சியைக் கைவிட்டு கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியதையடுத்து, கோட்டாபய ராஜபக்சவின் படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் அது ஊடகங்களில் வெளியானதை அடுத்து மீண்டும் அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை