விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை

பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

 

நிறுத்த வேண்டும்

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை | Dont Be As Prabakaran Says Ranil Wickremesinghe

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன.

உள்ளநாட்டு போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்த செயற்பாட்டை போராட்டக்காரர்கள் நிறுத்த வேண்டும்”, எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.