கனடாவில் பிரபலமான இலங்கைத்தமிழர் மறைவு
இலங்கைத்தமிழர் மறைவு
கனடாவில் பிரபலமாக இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரொறன்ரோவில் வசிக்கும் ஸ்ரீ குகன் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற இலங்கைத்தமிழரே உயிரிழந்தவராவார்.
ரொறன்ரோவில் உள்ள தமிழ் சமூகத்தினரின் குடியேற்றம், தொழிலாளர் நலன், இளைஞர்களை ஊக்குவிப்பது போன்ற வழிகாட்டுதல் பணிகளில் இவர் ஈடுபட்டு வந்தார்.
ஹரிஅனந்தசங்கரிஇரங்கல்
குறித்த இலங்கைத்தமிழர் உயிரிழந்தமை தொடர்பில் சக இலங்கை தமிழரும், நாடாளுமன்ற உறுப்பினருமமான ஹரிஅனந்தசங்கரி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில், ஒரு நண்பர், வழிகாட்டி மற்றும் சமூகத் தலைவராக அவர் இருந்தார். அவர் அதிகாரத்திடம் உண்மையைப் பேசினார், கொள்கை ரீதியான போராட்டத்தில் ஒருபோதும் பின்வாங்கவில்லை. ஸ்ரீ அண்ணா உங்களை மிகவும் மிஸ் செய்வோம் என ஹரிஅனந்தசங்கரி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை