GP Muthu : “எனக்கு 41 வயசு ஆகுது.. தனலட்சுமி கால்ல விழுறேன்” .. ஜனனியிடம் மனம் திறந்த ஜிபி முத்து
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் களைகட்டியுள்ளது, இதில் போட்டியாளர்கள் 4 அணியினர்களாக பிரிக்கப்பட்டு சமையல், வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இதில், ஜிபி முத்து பாத்திரம் கழுவும் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அதே அணியில் தனலட்சுமி, ஆயிஷா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, ஜிபி முத்து செய்வது தனக்கு பிடிக்கவில்லை என கேமராவை பார்த்து தனலட்சுமி கூறி இருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், இருவருக்கும் இடையே மோதலும் நேரடியாக வெடித்தது. தனக்கு மரியாதை தரவில்லை என தனலட்சுமி ஜிபி முத்துவை கூற, இதனால் ஜிபி முத்துவும் கடுப்பாகிறார். மேலும், தான் மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் என்னை முறைத்து பார்த்தார் என ஜிபி முத்து சொல்கிறார்.
இதன் பின்னர், போட்டியாளர்கள் அனைவரும் ஜிபி முத்து – தனலட்சுமி விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருகின்றனர். அப்போது ஜிபி முத்து நடிப்பதாக தனலட்சுமி கூற, இதனால் கோபப்பட்ட ஜிபி முத்து அவரிடம் நேரடியாக பேசுகிறார். இது பெரிய விவகாரமாக, அங்கே பரபரப்பும் தொற்றிக் கொண்டது.
இதன் பின்னர் தான் நடிப்பதாக தனலட்சுமி கூறியதால் மனமுடைந்த ஜிபி முத்து, கண்ணீர் விடவும் ஆரம்பித்தார். தான் நடிக்கவா செய்கிறேன் என சக போட்டியாளர்களிடம் கேட்டுக் கொண்டே அழுத ஜிபி முத்துவை அனைவரும் தேற்ற ஆரம்பித்தார்கள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஜிபி முத்து, திடீரென அழுத விஷயம் தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே ஜிபி முத்துவிடம் பேசும் ஜனனி, “நீங்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறீங்க அண்ணா.. என்ன இது” என வினவ, அப்போது ஜிபி முத்து, “எனக்கு பிக்பாஸ் வந்ததே போதும். எனக்கு மரியாதை கொடுக்கணும் மத்தவங்களுக்கு உதவி செய்யணும், இந்த ரெண்டே விசயம்தான், அந்த பொண்ணு தனலட்சுமிக்கு என்ன ஒரு 18, 20 வயசு இருக்குமா? எனக்கு 41 வயசு.. கால்ல விழ போறேன்.. ஆனா அப்பவும் அந்த பொண்ணு ஒரு மரியாதையே இல்லாம இருக்கு!” என வருத்தப்பட்டுக் கொள்கிறார்.
கருத்துக்களேதுமில்லை