விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பறக்கும் கார்கள்
டுபாயில் மேற்கொள்ளப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் பறக்கும் கார் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பறக்கும் கார்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளன.
சீனாவின் மின்சார வாகன தொழில்நுட்ப நிறுவனமான Xpeng இந்த பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது. இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் பெயர் X2.
அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 130 கீலோமீற்றர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த கார், 760 கிலோ எடையுடன் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் கடந்த திங்கட்கிழமை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் கார் சோதனை நடைபெற்றுள்ளது.
X2 உலகின் முதல் பறக்கும் கார் இல்லை என்றாலும், முதன்முறையாக பொதுமக்களை சுமந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.
X2 காரை முதலில் துபாயில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பின்னர் மெதுவாக சர்வதேச சந்தைகளில் அவற்றை விற்பனை செய்யவுள்ளதாகவும் அவை அடுத்த இரண்டு வருடங்களில் விற்பனைக்கு வரும் எனவும் Xpeng நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை