இலங்கையின் கடன் மறுசீரமைப்பு – இந்தியா சீனாவிடமிருந்த பாரிஸ் கிளப்பிற்கு இன்னமும் பதிலில்லை

பாரிஸ் கிளப் கடந்த மாதம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனா இந்தியாவுடன் தொடர்புகொண்டது எனினும் இதுவரை அந்த நாடுகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து பாரிஸ் கிளப் இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இரண்டு நாடுகளை தொடர்புகொண்டது.

எனினும் இதுவரை பாரிஸ் கிளப்பிற்கு பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டின் போது பாரிஸ் கிளப் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.