ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை… ஆச்சர்யமூட்டும் முதல் முயற்சி!
இதயம், கல்லீரல் என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் முதல்முறையாக ஒரு வயது குழந்தைக்கு, குடல் மாற்று அறுவை சிகிச்சை (Intestine transplant) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
நாம் உண்ணும் பெரும்பான்மையான உணவுகளின் ஊட்டச்சத்துகளைச் செரித்து, சிறுகுடலே உடலுக்கு வழங்கும். சிறுகுடல் சரியாக இயங்காத பட்சத்தில், உண்ணும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகளை நம்முடைய உடலால் பெறமுடியாது.
ஸ்பெயினில் உள்ள எம்மா (Emma) என்ற ஒரு வயதுக் குழந்தைக்கு, சிறுகுடல் (short intestines) சிறிதாக இருந்துள்ளது. இதனால் பிறந்த ஒரு மாதத்திலேயே குடல் செயலிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, வேகமாக மோசமடைந்த குழந்தையின் உடல்நிலை, பல உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அவரைத் தள்ளியது.
கருத்துக்களேதுமில்லை